பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ஐஜி விகாஸ் வைபவ் வீட்டில் அவரது சர்வீஸ் ரிவால்வர் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இவரது வீட்டில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் சூரஜ் குமார் என்பவர் இன்று (நவம்பர் 25) ரிவால்வரை திருடியுள்ளார். இதுகுறித்து அறிந்த விகாஸ் வைபவ் பணியாளர் சூரஜ் குமாரை பிடித்து விசாரிக்கையில், தன்னுடைய ஸ்மார்ட்போன் பழுதாகிவிட்டால் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டதாகவும், பணம் கிடைக்காததால் ரிவால்வரை திருடி தனது நண்பருக்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அவரையும் கண்டுபிடித்த ஐஜி விகாஸ் வைபவ் ரிவால்வரை மீட்டார். இதுகுறித்து விகாஸ் வைபவ் தரப்பில், நேற்றிரவு எனது படுக்கை அலமாரியில் வைத்த சர்வீஸ் ரிவால்வர் மற்றும் 25 தோட்டாக்கள் இன்று காலை காணாமல் போனது. இதுகுறித்து எனது மனைவியிடம் கேட்டபோது, எனது வீட்டில் வேலை செய்யும் சூரஜ் குமார் தவிர வேறுயாரும் உள்ளே வரவில்லை என்று தெரிவித்தார். அதன்பின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தேன். அதில் அவர் வெளியே செல்லும்போது கையில் எதையோ எடுத்துச்செல்வது தெரிந்தது.
அதனடிப்படையில் அவரை பிடித்து விசாரிக்கையில் அவர் திருடியதையும், அதன்பின் அதை தோலா பகுதியைச் சேர்ந்த சுமித் என்பவருக்கு விற்றதையும் ஒப்புக்கொண்டார். குறிப்பாக புதிய போன் வாங்குதற்காக இதை செய்ததாக தெரிவித்தார். இப்போது ரிவால்வர் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. விசாரணை நடத்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தற்கொலை செய்து கொள் இன்சூரன்ஸ் தொகையை நான் பெற்றுக் கொள்கிறேன்" - மனைவியை மிரட்டிய கணவர்