ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால், கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டவர் புர்கான் வானி. இவர், பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவரும், அவ்வமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் ஆவார்.
புர்கான் வானியை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தபோது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் போராட்டக்களம் ஆனது. இதனால், சுமார் ஏழு மாதம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தில் இருந்தது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவரின் தந்தை முஷாபர் வானி, சுதந்திர தினமான இன்று புல்வாமாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், அதன் தலைமை ஆசிரியர்கள் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்வை நடத்தவேண்டும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி, தலைமை ஆசிரியரான புர்கான் வானியின் தந்தை முசாபர் வானி கொடியேற்றியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!