டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண் இன்று (ஏப். 5) கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு எச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனது உறவுக்கார சிறுவனிடம் நட்பாக பழகிவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்துவந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியைடந்த குடும்பத்தார் இருவருக்கும் நிலைமையை எடுத்துசொல்லி, பிரித்துவைத்தனர். இருப்பினும் அந்த பெண் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுவனின் தந்தை போலீஸ் புகார் அளித்தன் அடிப்படையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணிற்கு மாதம் ரூ. 7,500 வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!