ETV Bharat / bharat

கார் விபத்தில் உணவு டெலிவரி பாய் பலி.. 100 மீட்டர் தரதரவென இழுத்து செல்லப்பட்ட கொடூரம்! - கர்நாடகா விபத்து செய்தி

கர்நாடக தலைநகர் பெங்களூரு ஆர்ஆர் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் உணவு டெலிவரி செய்யும் நபரின் பைக் மீது கார் மோதியதோடு சுமார் 100 மீட்டர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் உயிரிழந்தார்.

hit-and-drag-case-in-bengaluru-car-hits-bike-and-drag-rider-for-100-meters-food-delievery-boy-dies

author img

By

Published : Jun 19, 2023, 4:41 PM IST

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரு விஜயநகரை சேர்ந்தவர் விநாயக், இவர் ராஜாஜி நகரில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமில் கடந்த சில வருடங்களாக விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டதால் இவருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தனது நண்பர்களுக்கு பார்டி ஏற்பாடு செய்ததுடன் மதுபோதையில் அலட்சியமாகக் காரை இயக்கி வந்துள்ளார். அப்போது ஆர்ஆர் நகர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே நள்ளிரவில், பைக்கில் உணவு டெலிவரி செய்வதற்காகச் சென்று கொண்டு இருந்த பிரசன்னா என்ற நபர் மீது கார் மோதியுள்ளது. அப்போது காரை நிறுத்தாத விநாயக் தொடர்ந்து சுமார் 100 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரசன்னா துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையும் படிங்க :சிறையில் உயிரிழந்த இளைஞர்... உடலை வாங்க மறுத்து 5ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்

விபத்தை ஏற்படுத்திய காரை நிறுத்தாத விநாயக் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பிற வாகன ஓட்டிகள் காரை 1 கி.மீ., துரத்திச் சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த விநாயக்கின் நண்பர்களான மூன்று இளம்பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் என 4 பேர் காரில் இருந்து இறங்கித் தப்பி ஓடிவிட்ட்டனர்விநாயக்

இதையும் படிங்க: JEE Advanced results: ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை!

காரை மடக்கி பிடித்த அப்பகுதியினர் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாது , விநாயகிற்கு தர்ம அடி கொடுத்துள்ளனர் , பின்னர் அவரை அழைத்து சென்று படராயன்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரனையில் விநாயக் மது அருந்தி வந்ததால் காரை அலட்சியமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து படராயன்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிற்சாலைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த காவலாளி அடித்துக்கொலை.. கேரளாவில் நடந்தது என்ன?

ஊக்கத்தொகை பெற்ற மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குடித்து கும்மாளம் அடித்துவிட்டு மதுபோதையில் அலட்சியாக காரை இயக்கிய சம்பவத்தில் உணவு டெலிவரி பாய் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விநாயக்கிற்கு எதிராக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; இரண்டு பேர் கைது, ஒருவர் தலைமறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.