தொல்லியல் துறையின்கீழ் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மே 15ஆம் தேதிவரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தனது ட்விட்டரில், "கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து தொல்லியல் துறையின்கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மே 15ஆம் தேதிவரை அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.