தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை ஏப்ரல் 2ஆம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள காதர் லிங்க சுவாமி தர்காவிலும் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில், இந்துக்கள் மட்டுமல்லாமல், ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அங்கு நடைபெற்ற "பஞ்சாங்க ஷ்ரவணம்" நிகழ்ச்சியில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சாதி, மத பேதமின்றி உகாதியை கொண்டாடினர்.
இந்த தர்காவில், கடந்த 355 ஆண்டுகளாக பஞ்சக ஷ்ரவணம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.