டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் 5 ஆண்டு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை மாற்றியமைத்து பாஜக புதிய சாதனை படைக்கும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா இன்று (டிசம்பர் 8) தெரிவித்தார். இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன.
பிற்பகல் 2.40 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 17 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றும், 28 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்துவருகிறது. இந்த முடிவுகளின்படி இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறுகையில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக புதிய சாதனை படைக்கும். பெரும்பான்மையுடன் 2ஆவது முறையாக ஆட்சி அமைக்கும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை மாற்றியமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான வளர்ச்சி அரசியல் இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நடக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் இடைத்தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை