இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள டான்சிங் நல்லா பகுதியில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காணமால் போன நிலையில், ஏழு பேரின் உடல் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய நபர்களின் உடலை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மீட்புக்குழு இந்த மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நிலச்சரிவு காரணமாக சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இமாச்சல் மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் பருவமழை காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் - மம்தா சூளுரை