கர்நாடகா: காவிநிறத் துண்டு அணிந்த மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், மேல்நிலைப்பள்ளியில் சேர்வதை பல்கலைக்கழக முன் கல்லூரி வகுப்புகள் என அழைக்கிறார்கள்.
அங்குள்ள கல்வி நிறுவனங்களும் அந்த மாணவ, மாணவிகளை முன் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் என்றே அழைக்கின்றனர்.
ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்
இந்த மாணவர்கள் தங்களுடைய வகுப்புகளுக்கு கல்வி நிறுவனம் அனுமதித்த சீருடை அணிந்தே வர வேண்டும். பட்டப்படிப்பு கல்லூரிகள் போல வண்ண ஆடை அணிந்து வர அனுமதி கிடையாது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவே இப்போது அந்த மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய மாணவிகள் மனுத்தாக்கல்
உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த 5 பெண்கள் ஹிஜாப் தடைகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்த மனுக்களை அம்மாநில உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி