அமராவதி: மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் 3 கிளைகளின் வங்கிக் கணக்குகளை பராமரிக்க (டிஃப்ரீஸ்) அனுமதி அளித்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில அரசும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நேற்று உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
சிராலா, விசாகா, சீதம்பேட் ஆகிய கிளைகளின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஆந்திரப்பிரதேச காவல்துறை மார்கதர்சி கிளை மேலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தது. இதை எதிர்த்து, மேலாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அனைத்து நோட்டீஸ்களையும் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மார்கதர்சி நிறுவன கிளைகளுக்கு எதிரான காவல்துறை நோட்டீஸ்கள் நிறுத்திவைப்பு!
இதையடுத்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில அரசும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நேற்று உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இந்த மேல்முறையீடுகள் பராமரிக்க முடியாதவை என்று நீதிமன்றம் கூறியது. மேலும், குற்றவியல் சட்டத்தின் விதிகளின்படி, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் மேல்முறையீடு செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தியது.
முக்கிய வழக்குகளில் பதில் மனுவை தனி நீதிபதி முன் தாக்கல் செய்ய அரசு மற்றும் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடிய விரைவில் தனி நீதிபதி முக்கிய வழக்குகளை விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.துர்காபிரசாத ராவ், நீதிபதி ஏ.வி.ரவீந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.