வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாட்டின் 72ஆவது குடியரசு தினமான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான ஹரியானாவில் பாதுகாப்பை பலப்படுத்த அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுமட்டுமின்றி காவல்துறை இயக்குநர் மனோஜ் யாதவ், “என்ன நேர்ந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள பரிதாபாத் மாவட்டத்தில் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க:தலைநகரில் தொடரும் பதற்றம்...மத்திய உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!