டெல்லி: காங்கிரசின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.சி.வேணுகோபால், ஜூன் 2021க்குள் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்படி, ஒரு கட்சித் தலைவர் ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். 2017 ஆம் ஆண்டில், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அக்கட்சி பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவர் 2019இல் ராஜினாமா செய்தார். அப்போதிருந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக இருந்துவருகிறார்.
ஒருவேளை 5 ஆண்டுக்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது வாக்கெடுப்பு நடக்கும். ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ய குழுவில் உள்ள 10 நபர்களில் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தை குறிவைக்கும் காங்கிரஸ்; மக்களை கவர்வாரா பிரியங்கா காந்தி?