ETV Bharat / bharat

புதிய வகை கரோனா 'எக்ஸ்இ' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒருவருக்கு உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தொற்று எக்ஸ்இ பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எக்ஸ்இ வகை தொற்றின் அறிகுறிகள், பாதிப்புகள் குறித்து இங்கு காண்போம்.

புதிய வகை கரோனா
புதிய வகை கரோனா
author img

By

Published : Apr 7, 2022, 1:36 PM IST

உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த வாரம் புதிய வகை வைரஸ் மாறுபாடு குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டது. அதில், முன்னர் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் மாறுபாட்டை விட இந்த புதிய வைரஸ் அதிவேகமாக பரவல் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உருமாற்றமடைந்த புதிய வகை வைரஸான 'எக்ஸ்இ' ஒமைக்ரான் பிஏ1 (BA.1) மற்றும் பிஏ2 (BA.2) ஆகிய இரண்டு மாதிரிகளின் கலப்பாகும். இந்த புதிய வகை வைரஸ் முதன் முதலில் ஜனவரி 19ஆம் தேதி இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. தற்போது உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இங்கிலாந்தில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த புதிய வகை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 6) மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவருக்கு இந்த புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு முன்னர் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் மாறுபாட்டை விட 10 மடங்க வேகமாக பரவக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் இந்த தொற்று பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிய வகை எக்ஸ்இ தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சளி, தும்மல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் கண்டறியப்பட்ட வைரஸுகளுக்கு காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இந்த புதிய வைரஸ் மாறுபட்டதாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

எக்ஸ்இ மாறுபாடு தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வகை வைரஸ் பரவலின் தீவிரத் தன்மை, தடுப்பூசி செயல்திறன் ஆகியவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள கூடுதல் தரவுகள் தேவைபடுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அண்மையில் மத்திய அரசு கரோனா கட்டுபாடுகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.