ETV Bharat / bharat

ரப்பர் எஸ்டேட்டை விட்டுப்போக மாட்டோம் - கேரளாவில் அடம்பிடிக்கும் யானைக் கூட்டம் - கேரளாவில் அடம்பிடிக்கும் யானை கூட்டம்

திருச்சூர் அருகே யானைக்குட்டிகள் உள்பட 40 யானைகள், ரப்பர் எஸ்டேட் ஒன்றில் கடந்த சில நாள்களாக முகாமிட்டு, ரப்பர் மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் அடம்பிடிக்கும் யானை கூட்டம்
கேரளாவில் அடம்பிடிக்கும் யானை கூட்டம்
author img

By

Published : Mar 22, 2022, 9:58 PM IST

திருச்சூர் (கேரளா): கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் பலப்பிள்ளி பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் யானைக்குட்டிகள் அடங்கிய 40 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், எஸ்டேட்டில் உள்ள பல ரப்பர் மரங்களை வேரோடு சாய்த்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை எஸ்டேட்டில் இருந்து துரத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

கோடைக்காலம் என்பதால் யானைக் கூட்டம் தண்ணீர் தேடி தோட்டங்களுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எஸ்டேட் பணியாளர்கள் அதிகாலை 3 மணியளவில் எஸ்டேட்டுக்கு வருவது வழக்கம் என்பதால், பணியாளர்கள் யாரும் அதிகாலை நேரங்களில் பணிக்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பணியாளர்கள் தனியாக வராமல் கூட்டமாக வரவேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

யானைக்கூட்டம் குறித்து ரப்பர் எஸ்டேட் பணியாளர்கள் கூறுகையில், "முதலில், யானைகள் பகல்பொழுதில் இங்கு வருவதும் பின்னர் மாலையில் காட்டுப்பகுதியில் செல்வதுமாக இருந்தன. ஆனால், தற்போது அவை மாலையில் காட்டுக்குப் போக மறுக்கின்றன. அவை கடந்த சில நாள்களாக எஸ்டேட்டிலேயே முகாமிட்டு, மரங்களை சேதப்படுத்தி வருகின்றன" என்கின்றனர்.

இதையும் படிங்க: மைக்ரோவேவ் ஓவனில் 2 மாத குழந்தை - அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.