தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் நேற்றிரவு (அக்.8) தொடர்ந்து மூன்று மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் நகரின் சில பகுதிகள், மழை நீர் சூழ்ந்து காணப்பட்டன.
இதனால் ஹயாத் நகர், வனஸ்தலிபுரம், லால் பகதூர் சாஸ்திரி (எல்பி) நகர் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையடுத்து சாலைகளில் மழை நீர் சூழ்ந்ததால், சாலைகள் ஆறுகள் போல் காட்சியளித்தன. மேலும் வீடுகள், உணவகங்களிலும் மழை நீர் புகுந்தது.
இதனைத்தொடர்ந்து பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: பாம்பன் புதிய பாலம் பணிகள் எப்போது நிறைவடையும்? - அமைச்சர் பதில்