புதுச்சேரி: சமீபத்திய நிலவரப்படி 138 மி.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக பாகூர் மற்றும் ஊசுடு ஏரிகள் முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நீர் தேங்குதல், மின் கம்பம் சேதம் தொடர்பான 15 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை பெய்த கனமழையால் 62 குடிசைகள், 27 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் இதைத் தவிர வேறு உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.
கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2 நாள்களுக்கு உணவுப்பொருள்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்