ETV Bharat / bharat

வடமேற்கு மாநிலங்களில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும் - உத்தரபிரதேசம்

வடமேற்கு மாநிலங்களில் நாளை முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heat wave
Heat wave
author img

By

Published : Apr 16, 2022, 1:27 PM IST

டெல்லி: வடமேற்கு மாநிலங்களில் கடந்த வாரம் முதல் வெப்பநிலை மிகவும் மோசமாக வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக 43.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (17-4-2022) முதல் 19ஆம் தேதி வரை வெப்பம் அதிகமாக காணப்படும் என்றும், பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்முவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் நாளை முதல் 19-ம் தேதி வரை வெப்ப அலை அதிகரித்து காணப்படும். வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். வரும் 19-ம் தேதிக்குப் பிறகு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலை திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.