டெல்லி: கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பயனர்களுக்குச் செலுத்த முனைப்பு காட்ட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா குறிப்பிடும்போது, “இதுவரை நாட்டில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் என அனைத்தும் சேர்த்து 16.50 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் மக்கள் குறைந்த அளவிலையே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்டுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதனால் தடுப்பூசியின் செயல் திறன் குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே மாநில அரசுகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது தவணை செலுத்த அறிவுறுத்த வேண்டும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும்” எனக் கூறியுள்ளார்.