இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்து வருகிறது.
தற்போது 402 பேருக்கு புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகள் 834 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 4,497 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது தொற்றிலிருந்து 809 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த சில தினங்களாக 500க்கும் கீழே சென்றது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்த குணமடைந்து வருபர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக உள்ளது.
குணமடைந்தவர்களின் சதவீதம் 93.77 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் சேர்த்து, கரோனா தொற்று பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 5,331 ஆக குறைந்துள்ளது.
இந்தநிலையில், இன்று (ஜூன்.13) புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 விழுக்காட்டிற்கும் (4.61) கீழே குறைந்துள்ளது. இதுவரை, 3 லட்சத்து 21 ஆயிரத்து 911 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஜூன் 16 முதல் 19 தேதி வரை முகாமில் தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான், கரோனா நோய்த் தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்" என, அந்த செய்திக்குறிப்பில் அருண் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா இறப்பை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை'