ETV Bharat / bharat

அரசு பங்களாவை காலி செய்யும் விவகாரம்; மஹுவா மொய்த்ரா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்..

TMC Ex. MP Mahua Moitra: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்த உத்தரவைத் தொடர்ந்து அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யக் கோரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

hc-asks-mahua-moitra-to-approach-directorate-of-estates-over-cancellation-of-govt-accommodation
அரசு பங்களாவை காலி செய்ய கோரி நோட்டீஸ்; ரத்து செய்ய மஹுவா மொய்த்ரா மனு - டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி
author img

By PTI

Published : Jan 4, 2024, 8:59 PM IST

டெல்லி: தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா டிசம்பர் 8ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து, எஸ்டேட் இயக்குநரகத்தின் சார்பில் அரசு பங்களாவை காலி செய்யக் கோரி மஹுவா மொய்த்ராவிற்கு டிசம்பர் 11ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி ஜனவரி 7ஆம் தேதி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மஹுவா மொய்த்ரா டெல்லி நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்தார். அதில், "எஸ்டேட் இயக்குநரகத்தின் சார்பில் அரசு பங்களாவை காலி செய்யக் கோரி டிசம்பர் 11ஆம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் அல்லது 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசு பங்களாவில் தங்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி அரசு பங்களாவில் குடியிருப்பவர்கள் மேலும் சில காலம் தங்க அதிகாரிகள் அனுமதித்தால் கூடுதல் காலம் தங்க விதிகள் உள்ளது.

மேலும், கூடுதல் காலம் தங்குவது தொடர்பாக மனுதாரர் எஸ்டேட் இயக்குநரகத்திற்கு மனு அளிக்கவும் அந்த மனுவை எஸ்டேட் இயக்குநரகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் மஹுவா மொய்த்ரா தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்தார்.

இதனையடுத்து மஹுவா மொய்த்ரா தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்க ஏற்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.