ETV Bharat / bharat

மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!

தனது மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மதத்தை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது மனைவி புகார்!

author img

By

Published : May 29, 2022, 5:15 PM IST

யமுனாநகர்: ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவர் உண்மையான மதத்தை மறைத்ததோடு, தற்போது தன்னை அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்துகிறார் என்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், மதம் மாறவில்லையெனில் தன்னையும் தனது குழந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள இந்து பெண் ஒருவர் அவரது முதல் கணவர் இறந்தவுடன், இரண்டாவதாக ஒருவரை 2012இல் மறுமணம் செய்துகொண்டார். அப்போது அந்த நபர் தனது பெயர் அமன் ராணா எனவும், தான் ஒரு இந்து எனக் கூறியும் இந்த திருமணத்திற்கு அப்பெண்ணை ஒப்புக் கொள்ள வைத்துள்ளார்.

இதற்கிடையில், நாளடைவில் அந்த நபர் பொய் கூறி அப்பெண்ணை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு பின் கணவனும், அவரது குடும்பத்தாரும் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தியதாக தெரிவித்தார். இந்த பெண்மணி சென்ற 2006 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவருக்கும், முதல் கணவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. 2011இல் அவரது முதல் கணவர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் அவரை வீட்டை வீட்டு வெளியே துரத்தியதும், ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு ஓட்டுநராக பணிபுரிந்தவரிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இவரது திருமணத்திற்கு பின் அனைத்து உண்மையும் தெரியவந்ததாகவும் அவரது இரண்டாவது கணவரின் உறவினர்கள் அவரை மாமிசம் சாப்பிடுமாறும், அவர்களது மதத்திற்கு மாறுமாறும் துன்புறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனை புகாராக அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:4ஆம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்ததாக சக மாணவி புகார்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.