ETV Bharat / bharat

சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரி காலணிகளைத் துடைத்த முன்னாள் முதலமைச்சர்! - சீக்கியர்கள் பஞ்ச் பியாரே

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவை புகழ்ந்து உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பேசிய வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மன்னிப்பு கோரும் விதமாக குருத்வாராவில், தரை, காலணிகளை அவர் தூய்மைப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரி காலணிகளை துடைத்த முன்னாள் முதலமைச்சர்?

author img

By

Published : Sep 4, 2021, 8:18 AM IST

உத்தரகாண்ட்: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உள்கட்சிப் பூசல் தொடர்ந்துவரும் நிலையில், நிலமையை ஆராய அக்கட்சியின் மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளருமான ஹரீஷ் ராவத் செல்லவுள்ளார்.

ஹரீஷ் ராவத் சர்ச்சைப் பேச்சு

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவராக, கடும் எதிர்ப்புகளை மீறி முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவை அக்கட்சி நியமித்தது. இந்நிலையில், சித்துவுடன் இருந்தபடி ஹரீஷ் ராவத் சீக்கிய மதம் குறித்த பேசிய வார்த்தைகள் முன்னதாக அம்மாநில மக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரி காலணிகளை துடைத்த முன்னாள் முதலமைச்சர்

தரை, காலணிகளை தூய்மைப்படுத்திய ஹரீஷ் ராவத்

இந்தச் சூழ்நிலையில், தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கோரும்விதமாக, உத்தரகாண்டில் உள்ள குருத்வாராவில், தரை, காலணிகளை ஹரீஷ் ராவத் சுத்தப்படுத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய ஹரீஷ் ராவத், ”பஞ்ச் பியாரேவின் தியாகம் பெரியது. அவர்களுடன், யாரையும் ஒப்பிட முடியாது. சிலர் மீது நாம் வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் வார்த்தைகள் தவறாக முடியும். அந்த வகையில், சித்து குறித்து பேசும்போது வெளிப்பட்ட எனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுகேள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

'பஞ்ச் பியாரே'

'பஞ்ச் பியாரே' என்பது சீக்கிய குரு கோவிந்த் சிங் தேர்ந்தெடுத்த ஐந்து அன்பான மனிதர்களைக் குறிக்கிறது. இவர்கள் அம்மதத்தில் விசுவாசம், பக்தியின் அடையாளமாக போற்றப்பவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை ஜாலியன் வாலாபாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.