ETV Bharat / bharat

உன்னாவ் சிறுமியின் தாயார் படுதோல்வி; நோட்டாவின் ஓட்டுக்களையும் தாண்டாத பரிதாபம் - உன்னாவ் மாணவியின் தாயார் பெற்ற வாக்குகள்

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அங்கு போட்டியிட்ட நிலையில், நோட்டோவிற்கு கிடைத்த வாக்குகளை விட குறைவான வாக்கினை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவ் சிறுமியின் தாயார் படுதோல்வி
உன்னாவ் சிறுமியின் தாயார் படுதோல்வி
author img

By

Published : Mar 10, 2022, 10:44 PM IST

டெல்லி: கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த குல்தீப் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்தார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் பாலியல் வன்புணர்வு வழக்கு விசாரணை முடிவில், குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். உன்னாவ் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சமாஜ்வாதி எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தாது என முதலில் கூறியிருந்தார். ஆனால், இறுதிநேரத்தில் சமாஜ்வாதி அங்கு ஒரு வேட்பாளரை நிறுத்தியது.

படுதோல்வியைடந்த காங்கிரஸ்

இந்நிலையில், வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயார் ஆஷா சிங், வாக்கு எண்ணிக்கையில் பத்து சுற்று முடிவில் 438 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதையடுத்து, அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் குப்தா வெற்றி பெற்றுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் இரண்டாமிடம் பிடித்த நிலையில், ஆஷா சிங் நோட்டாவுக்கும் குறைவான வாக்கினைப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 273 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 125 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பெரும்பான்மைக்கு 202 இடங்கள் போதுமானது என்பதால், மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காமெடியன் To முதலமைச்சர் - பகவந்த் சிங் மாண் பஞ்சாப் முதலமைச்சர் ஆன கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.