ஆமதாபாத்: குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவியில் இருந்து புதன்கிழமை (மே18) விலகினார் ஹர்திக் பட்டேல்.
ஹர்திக் பட்டேல் விலகல்: இது தொடர்பாக ட்விட்டரில் அவர், “நான் இன்று (மே18) குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு அனைத்து குஜராத்திகளாலும் என் நலம்விரும்பிகளாலும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன். குஜராத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த நடவடிக்கைகளை செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சி அளித்த அதிகாரப்பூர்வ பொறுப்பை தனது ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கினார். அப்போது அவர் பாஜக அல்லது ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளில் இணையப் போகிறார் என்று வதந்திகள் பரவின.
குஜராத்தில் மும்முனைப் போட்டி: ஹர்திக் பட்டேல் கடந்த காலங்களில் பாஜகவின் செயல்பாடுகளை தீவிரமாக விமர்சித்தவர் ஆவார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் ராமர் கோவில் விவகாரம் என பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
குஜராத்தில் வரும் ஆண்டு (2023) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸூம், கணக்கை தொடங்க ஆம் ஆத்மியும் ஆயத்தமாகிவருவதால் மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய ஹர்திக்- பரபரப்பு பின்னணி