ETV Bharat / bharat

உலக பாரம்பரியச் சின்னமான குஜராத்தின் ’துலாவிரா’ : பிரதமர் மோடி மகிழ்ச்சி! - யுனெஸ்கோ

குஜராத்தில் உள்ள ஹரப்பா நாகரீகக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமான ’துலாவிரா’ நகரம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக இன்று (ஜூலை.27) அறிவிக்கப்பட்டது.

துலாவிரா
துலாவிரா
author img

By

Published : Jul 27, 2021, 6:54 PM IST

குஜராத் மாநிலத்திலிருந்து பாவகாத் அருகே உள்ள சாம்பனேர், படானில் உள்ள ராணி கி வாவ், வரலாற்று நகரமான அகமதாபாத் ஆகியவை ஏற்கனவே பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், துலாவிராவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது குஜராத் மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துலாவிரா
துலாவிரா நினைவுச் சின்னங்கள்

இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ”இந்தச் செய்தியால் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிந்துள்ளேன். துலாவிரா பண்டைய காலத்துடன் நம்மைப் பிணைக்கும் முக்கிய நகர மையமாக விளங்கி வருகிறது. வரலாறு, கலாச்சாரம், தொல்பொருளியல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய நகரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் மோடி ட்வீட்

முன்னதாக, தெலங்கானா மாநிலம், வாரங்கலில் காக்கதீயர்கள் காலத்தில் கட்டப்பட்ட 808 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமப்பா கோயில் எனப்படும் ருத்ரேஸ்வரர் கோயிலும் இன்று காலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள யுனெஸ்கோ, "இந்தியாவின் ஹரப்பா நகரமான துலாவிரா, யுனெஸ்கோவின் பாரம்பாரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளது.

துலாவிரா
யுனெஸ்கோ ட்வீட்

மேலும், இது குறித்து ட்வீட் செய்துள்ள ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, "யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் வரிசையில் 40ஆவது சின்னமாக துலாவிரா சேர்க்கப்பட்டுள்ள இந்த செய்தியை, சக இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் உலக பாரம்பரிய தள கல்வெட்டுகளுக்கான ’சூப்பர் 40’ கிளப்பில் இந்தியா தற்போது இணைந்துள்ளது மற்றொரு பெருமையாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

துலாவிரா
ஹரப்பா காலத்து நினைவுச் சின்னங்களைத் தாங்கிய துலாவிரா

மேலும், குஜராத்திற்கு இது மகிழ்ச்சியான, பெருமைமிகு நாள் எனத் தெரிவித்துள்ள கிஷன் ரெட்டி, "2014ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவிலிருந்து புதிதாக 10 பாரம்பரிய சின்னங்கள் அதாவது மொத்த தளங்களில் நான்கில் ஒரு பங்கு சேர்க்கப்பட்டுள்ளது., இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இந்திய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது" என்றும் ட்வீட் செய்துள்ளார்.

துலாவிரா
துலாவிரா

உலக பாரம்பரியக் குழுவின் கடந்த ஆண்டு கூட்டம் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த 44ஆவது கூட்டம் சீன நாட்டின் புஜோவில் ஜூலை 16ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை காணொலி வாயிலாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தெலங்கானாவின் ராமப்பா கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.