பதிண்டா : இன்றைய அவசர கதி வாழ்க்கையில், மக்கள் பொதுவாக, துரித உணவு வகைகளையே, அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை உணவுகள் குறுகிய காலத்தில் தயாரிக்கப்படுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிப்பவைகளாகவே உள்ளன.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், மில்லட்ஸ் மேன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் ராகேஷ் நருலா, உடலுக்கு ஆரோக்கியமான தானிய வகைகளிலிருந்து துரித உணவைத் தயாரிக்கவல்ல ஒரு சிறப்பு முயற்சியை எடுத்து உள்ளார், இதனால் மக்கள் துரித உணவுகளை உட்கொள்வதால், ஏற்படும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ள முடியும்.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு: ராகேஷ் நருலா கூறியதாவது: துரித உணவுகளில் அதிக அளவில் கொழுப்பு பயன்படுத்தப்படுவதால், அதை உட்கொள்ளும் நமக்கு, பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. ராகேஷ் நருலா, பதிண்டா பகுதியின் மகேஸ்வரி சௌக் அருகே உள்ள உணவக உரிமையாளரான ஜஸ்தீப் சிங் கிரேவாலைத் தொடர்பு கொண்டு, தினை உள்ளிட்ட தானியங்களிலிருந்து பீட்சாவை தயாரிக்க முயன்றார். அது வெற்றியடைந்தது மட்டுமல்லாது, மக்களாலும் பெருமளவில் விரும்பப்பட்டது.
மக்களை கவர்ந்த பீட்சா : உணவகத்தை நடத்தும் ஜஸ்தீப் சிங் கூறியதாவது: இந்த உணவகத்தை திறந்தபோது, மக்களுக்கு நல்ல சத்தான உணவு வழங்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததை சாதிக்க, எனக்கு அதிக கால அளவு பிடித்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, முதல் பீஸ்ஸா உணவை உருவாக்கினேன், இது மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்ததாக தெரிவித்தார்.
இந்த புதிய வகை பீட்சா, உண்பதற்கு ருசியாக இருப்பதைத் தவிர, மனிதனின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் வகையில் உள்ளது. தினை போன்ற தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீட்சா பேஸ், வெற்றி பெற்றது.
ஜஸ்தீப் சிங் கிரேவால், அதன் பிறகு, மில்லட்ஸ் மேன் ராகேஷ் நருலா உடன் இணைந்து, புது உத்வேகத்துடன், தானியங்கள், கங்கினி, கோத்ரா மற்றும் பஜ்ரா ஆகியவற்றைப் பயன்படுத்தி துரித உணவைத் தயாரிக்க முன்வந்தார். மூன்று மாதங்கள் அவர்களது கடின உழைப்பால், தானியங்களைக் கொண்டு உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலான பீட்சாவை உருவாக்கினார்.
இந்த புதிய வகை பீட்சா பேஸ் மூலம் தயாரிக்கப்பட்ட துரித வகை உணவுகள், மக்களால் மிகவும் விரும்பப்பட்டன. இது மக்களால் பெரிதும் விரும்பப்படுவதற்கு காரணம் யாதெனில், எதையும் புதிதாக செய்யும்பட்சத்தில், மக்களிடையே அதற்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். இதுநாள் வரை பயன்படுத்தாத வகையிலான, புதிய பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், இதன் சுவை வித்தியாசமானதாக உள்ளது. இத்தகைய காரணங்களினாலேயே, இந்த புதிய வகை பீட்சா, மக்களிடையே, பெரும் வரவேற்பை பெற காரணம் ஆகும்.
பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் மாவு: உணவக உரிமையாளர் ஜஸ்தீப் கிரேவால் கூறியதாவது: மக்கள் வழக்கமாக சாப்பிடும் பீட்சாவில் மாவு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக, மனிதர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. மாவுப் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதால், , ஒற்றைத் தலைவலி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆட்படுகின்றனர். ஆனால் நாங்கள் தயாரித்து உள்ள இந்த ஆரோக்கியமான பீட்சாக்கள், துரித உணவுகளை சாப்பிடும் மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது, அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. . எதிர்காலத்தில் மில்லட் பீட்சா, பர்கர் போன்றவற்றையும் அதிக அளவில் தயார் செய்ய திட்டமிட்டு உள்ளதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியாவில் என்ன நடக்கிறது' - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி!