இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக மருத்துவப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், பல்வேறு சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
முதல் அலையின்போது பல நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை வழங்கி உதவிய நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் சிலின்டர்கள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் என பல வகை உதவிகளை சர்வதேச நாடுகள் செய்துவருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்திய அரசு பல சர்வதேச நாடுகளுக்கு உதவி செய்வதை மார்த்தட்டி பெருமையுடன் கூறிவருகிறது. ஆனால் அரசு முறையாக தனது பொறுப்பை செய்திருந்தால் இது போன்ற நிலை தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் உதவிப்பொருள்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.