ETV Bharat / bharat

அமெரிக்கா எச்-1பி விசா குலுக்கல் முறையில் முறைகேடு - இந்தியர்களுக்கு சிக்கலா? - எச் 1பி விசா குலுக்கல் முறை

எச்1பி விசா குலுக்கல் முறையில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை தெரிவித்து உள்ளது.

H 1B Visa
H 1B Visa
author img

By

Published : Apr 29, 2023, 12:37 PM IST

வாஷிங்டன் : அமெரிக்காவில் எச்-1பி விசாவுக்கான குலுக்கல் முறையில் தனியார்கள் நிறுவனங்கள் முறைகேடுகள் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அநாட்டு குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்கள் ஐடி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர்.

எச்-1பி விசா மூலம் பெரும்பாலும் குடியேறுபவர்கள் மென்பொருள் நிறுவனத் துறையில் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலே எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டி எச்-1பி விசா கோரப்படும் நிலையில், குழுக்கள் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், எச்-1பி விசா குலுக்கல் முறையில் சிறிய நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொழில் நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எச்-1பி விசாவுக்கான விண்ணப்பங்களை குலுக்கல் முறைக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இப்படி பலமுறை குலுக்கல் முறைக்கு விண்ணப்பங்களை அனுப்பும் போது அதில் தங்களது விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக நிறுவனங்கள் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நடப்பாண்டுக்கான எச்-1பி விசா ஸ்லாட்களில் 85 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதன் தேவையை செயற்கையாக அதிகரிக்கும் வகையில் 7 லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பங்கள் குலுக்கல் முறைக்கு பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே எச்-1பி விசா குலுக்கலுக்கு ஒருமுறை விண்ணப்பித்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு எச்-1பி விசா குலுக்கல் முறைக்கு 4 லட்சத்து 83 ஆயிரத்து 927 பேரும், அதற்கு முந்தையா 2021 ஆம் ஆண்டு 2 லட்சத்து 74 ஆயிரத்து 237 பேர் மட்டுமே முன்பதிவு செய்து இருந்ததாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இருமுறை பதிவு செய்த விண்ணப்பங்களை ரத்து செய்து மீண்டும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், முன்பதிவு குறித்த புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : Operation Kaveri : போர் முனையில் சிக்கிய இந்தியர்கள் மீட்பு! 1,500 இந்தியர்கள் நாடு திரும்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.