வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதி வளாக சுவரில் உள்ள இந்துக்கடவுள்களின் உருவங்களை வழிபட அனுமதிகோரி, இந்து பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்தப்பட்டதில், மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் வயதைக் கண்டறிய "கார்பன் டேட்டிங்" ஆய்வு நடத்த வேண்டும் என இந்து பெண்கள் சார்பில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கார்பன் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாக சுவற்றில் உள்ள இந்துக்கடவுள்களின் உருவங்களை வழிபட அனுமதி கோரிய வழக்கில் இன்று(நவ.8) வாரணாசி மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருந்தது. நீதிமன்ற அமர்வில் நீதிபதி ஒருவர் வராததால், வழக்கின் தீர்ப்பு வரும் நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஞானவாபியைப் போல, ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்ய உத்தரவு...