மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் சந்துபுரா கிராமத்தில் மார்ச் 31ஆம் தேதி போலி மதுபானம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர், உயிரழந்தவர்களின் பெயர் பிரதீப் அகிவார் மற்றும் விஜய் கேசவ் என்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைப் பெறுபவர்களின் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தனர். மத்திய பிரதேசத்தில் கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு ஜனவரிவரை 36க்கும் மேற்பட்டோர் போலி மதுபானம் அருந்தி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளா: போலி மதுபானம் அருத்திய 5 பேர் உயிரிழப்பு!