ஜம்மு காஷ்மீர் சோபியன் மாவட்டத்தில் வங்கிப் பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற வாகனத்தை அடையாளம் தெரியாத நான்கு பேர் மறித்து தாக்குதல் நடத்தினர். பின்னர், அதில் இருந்து 60 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய்வரை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என வங்கி அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடக்க்கிறது" என்றார்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஜம்மு காஷ்மீர் லிமிட்டெட் வங்கியை கொள்ளை அடித்து இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.