குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானம் நிலையத்திற்கு, துபாயிலிருந்து கடந்த 2013 முதல் 2018 வரை ரூ. 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 761 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்த கடத்தலில் தொடர்புடையை பார்கவ் தந்தி என்பவரை தேடி வந்துள்ளனர். இதனை அறிந்த பார்கவ் தந்தி தலைமறைவாக இருந்துவந்த நிலையில், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறி வைத்து பிடித்த காவல்துறை:
இந்த கடத்தலில் ஈடுபட்ட சிலர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது, தந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் காவல்துறையினரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்துள்ளார். அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாணை (வாரண்ட) பிறப்பித்து கைது செய்யமாறு காவல்துறையினருக்கு சுங்கத்துறை அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்தனர். குற்றப்பிரிவு காவல்துறையினர் குழு அம்ரேலி மாவட்டத்தில் உள்ள இங்கோரலா கிராமத்தில் தலைமறைவாக இருந்த பார்கவ் தந்தியை கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணநகர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோடிக்கணக்கில் தங்கம் கடத்தல்:
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018 வரை துபாயில் இருந்து அகமதாபாத் வந்த 46 விமானங்களில் இருந்து, ரூ. 200 கோடி மதிப்புள்ள 761 கிலோ தங்கத்தை பார்கவ் தந்தி கடத்தியுள்ளார். அதே ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,300 கோடி மதிப்புள்ள 4,000 கிலோ தங்கத்தை கடத்திய வழங்கிலும் அவருக்கு தொடர்பு உண்டு. இந்த கடத்தலில் விமான நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.