குஜராத்(பலன்பூர்): பனஸ்கந்தா மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகள் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்கத் கிராமத்தைச்சேர்ந்த சொலான்கி என்பவர் இன்று(ஆக.29) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனையடுத்து, இவர் ஓர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில், தன் தற்கொலைக்கு காரணமாக சொலான்கி எழுதி வைத்த வாக்குமூலத்தில், தன் மனைவி மற்றும் குழந்தைகளை மூளைச் சலவை செய்து மதம் மாற்றிய சோஹல் சேக் மற்றும் அவர் குடும்பத்தினர் தான் தன் தற்கொலைக்குக்காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சொலான்கியின் சகோதரர் ராஜேஷ் காவல்துறையிடம் அளித்த புகாரில், 'சேக் மற்றும் அவரின் குடும்பத்தினர் சொலான்கியின் குடும்பத்தை மூளைச்சலவை செய்து மதம் மாற்றிவிட்டதாகவும், மேலும், சொலான்கியின் மனைவி மற்றும் குழந்தைகளை குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாங்கள் சுயவிருப்பத்துடன் தான் இந்த முடிவை எடுத்து, தனியாக வாழ விரும்புவதாக ஓர் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அளிக்க வைத்துள்ளனர் எனவும்' தெரிவித்துள்ளார்.
மேலும், சொலான்கியின் மகள் கல்லூரியில் ஐஜஸ் சேக் என்பவருடன் பழகி வந்துள்ளார். இதை குடும்பத்தினர் எதிர்க்க, அவருடன் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளார். இதனையடுத்து, சில நாட்களில் இவரின் தாயும் சகோதரரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து சேக் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் சில நாட்களில் சொலான்கியுடன் தொடர்பில்லாமலும் போனதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தன் மனைவி மற்றும் குடும்பத்தினரைக் காண சொலான்கி சேக் குடும்பத்தை அணுகியபோது, அவர்களை சேர்த்து வைக்க 25 லட்சம் ரூபாய் சேக் குடும்பத்தினர் கேட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சொலான்கியும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான் அவரது குடும்பத்தைப் பார்க்கவிடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், சேக் மற்றும் அவரது 5 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்ப தகராறில் மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய நபர் கைது