ETV Bharat / bharat

குஜராத் அரசு சரியாகச் செயல்படாததால் நிலைமை மோசமாகிவிட்டது - நீதிமன்றம் சாடல் - குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி

குஜராத் உயர் நீதிமன்றம் மாநில அரசை தாளில் மட்டுமே செயல்படுவதாகக் கூறியதோடு அரசு சரியான திசையில் செயல்படாததால் கரோனா நிலைமை மோசமாகிவிட்டதாகச் சாடியுள்ளது.

குஜராத்
குஜராத்
author img

By

Published : Apr 28, 2021, 8:10 AM IST

Updated : Apr 28, 2021, 9:24 AM IST

காந்திநகர் (குஜராத்): கோவிட் நெருக்கடியை தவறாகக் கையாண்டதாக குஜராத் உயர் நீதிமன்றம் அம்மாநில அரசைக் குற்றம் சாட்டியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்துவருவது குறித்து நேற்று (ஏப். 27) உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அரசு தாளில் மட்டுமே செயல்படுவதாகக் கூறிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 'அரசு சரியான திசையில் செயல்படாததால் நிலைமை மோசமாகிவிட்டது' என்றும் கூறியுள்ளது.

மேலும் உயர் நீதிமன்றம், மாநில அரசு, அம்தாவத் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியது.

குஜராத் உயர் நீதிமன்றம்
குஜராத் உயர் நீதிமன்றம்

108 அவசர ஆம்புலன்ஸ்களால் அழைத்துவரப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே அம்தாவாத் மாநகராட்சி (ஏ.எம்.சி.) சிகிச்சை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை மேற்கோடிட்ட உயர் நீதிமன்றம், அம்தாவாத் மாநகராட்சி மாநிலத்தின் எல்லைக்குள் வரவில்லையா என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.

அதனுடன், மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் நெருக்கடி குறித்து உயர் நீதிமன்றம் மாநில அரசை சாடியது.

முன்னதாக, குஜராத் அரசு மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுமுதல் 45 வயது வரையிலான பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.

முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மாநிலத்தில் 14 ஆயிரத்து 296 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்பு நான்கு லட்சத்து 95 ஆயிரத்து, 287 ஆக உள்ளது.

Last Updated : Apr 28, 2021, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.