கடந்தாண்டு அக்டோபர் மாதம் இத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தொற்று சூழலில் பெண்ணின் கணவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது.
தற்போது இவர் பல்லுறுப்பு செயலிழப்பால் அவதிப்பட்டுவருகிறார். இதனால் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்தாலும் கணவரின் உறவு வேண்டும்
இதனையடுத்து தனது கணவருடனான தனது உறவு நீடிக்க அந்தப் பெண் தனக்கு குழந்தை வேண்டும் என விரும்பியுள்ளார். இது இன்-விட்ரோ கருத்தரித்தல் முறையில் மட்டுமே சாத்தியமாகும்.
இருப்பினும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அந்தப் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் பிறகு அந்தப் பெண் நேற்று (ஜூலை 20) குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அசுதோஷ் ஜே. சாஸ்திரி, மருத்துவமனையில் இருக்கும் நபரின் விந்தணுக்களைச் சேகரிக்கும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, மருத்துவ ஆலோசனைப்படி மாதிரிகளைச் சேமிக்க உத்தரவிட்டார்.
இன்-விட்ரோ கருத்தரித்தல் முறை
இன்-விட்ரோ கருத்தரித்தல் முறை என்பது நவீன கருத்தரித்தல் தொழில்நுட்பமாகும். இந்த முறையில் கரு முட்டையையும், விந்தணுக்களையும் கைமுறையாக இணைத்து கருத்தரிக்க வைக்க முடியும். இதன் பின்னர் கருப்பைக்குள் கரு வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவந்த மயிலால் விபத்து