ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்; c-VIGIL செயலி மூலம் அளிக்கப்பட்ட 900 புகார்கள்! - குஜராத் தேர்தல் ஆணையம்

குஜராத்தில் தேர்தல் நடைமுறை குறித்துப் புகார்கள் அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘c-VIGIL' செயலியில் 900 புகார்கள் பொதுமக்களால் அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல் ; c-VIGIL செயலி மூலம் அளிக்கப்பட்ட 900 புகார்கள்...!

author img

By

Published : Nov 15, 2022, 6:39 PM IST

அகமதாபாத்: மாநில தேர்தல் ஆணையம் - மத்திய தேர்தல் ஆணையம் சேர்ந்து குஜராத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக 'c-VIGIL' எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலியில் தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் தேர்தல் குறித்த புகார்களை அளிக்கலாம்.

இந்நிலையில், தற்போது அந்தச்செயலியில் தேர்தல் குறித்த 900-க்கும் மேற்பட்ட புகார்கள் தற்போது வரை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 611 பறக்கும் படையினர் மற்றும் 802 மாநில கண்காணிப்புக்குழுக்கள் இந்தப் புகார்களுக்குத் தீர்வுகளைக்கண்டறிய முனைந்து வருகிறது.

இது குறித்து தேர்தல் ஆணைய அலுவலர் பார்தி கூறுகையில், '' 'c-VIGIL' மொபைல் செயலியை பொதுமக்கள் தேர்தல் நடைமுறை குறித்த தங்களது புகார்களை தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தினோம். மாவட்ட அளவில் சிறப்புக்குழுக்கள் அமைத்து பொதுமக்கள் புகார்களுக்குத் தீர்வுகளைக் காண முனைந்து வருகிறோம்.

‘c-VIGIL' செயலி மூலம் பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வுகள் அளிக்கப்படுகிறது. இந்தச்செயலியின் மூலம் தற்போது 900 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், 870 புகார்களுக்குத் தீர்வுகள் கண்டறியபட்டுள்ளன.

200 புகார்கள் பொய் புகார்களாக அளிக்கப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டன. மேலும், கடந்த வாரம் இந்தச் செயலியின் மூலம் 1,323 புகார்கள் பொது மக்களால் அளிக்கப்பட்டது. இதில் 1,172 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது'' எனத்தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தேர்தல் நடைமுறை குறித்து பொதுமக்கள் புகார்கள் அளிக்க தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 44 புகார்கள் இதுவரை அளிக்கப்பட்டு, அனைத்துப் புகார்களுக்கும் தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. வாக்குக்கு பணப்பரிவர்த்தனை, கிஃப்ட்கள் அல்லது கூப்பன்கள் வழங்குவது, அனுமதியின்றி போஸ்டர்கள், பேனர்கள் வைப்பது, ஆயுதங்களை வைத்து மிரட்டுவது, தேர்தல் விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்கள் குறித்த புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன

இதையும் படிங்க: லிவிங் டூ கெதர் பயங்கரம்: காதலியின் பாகங்களை மீட்க காட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.