குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று (பிப். 14) பங்கேற்றார். இந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் முதலமைச்சர் விஜய் ரூபானி ஈடுபட்டபோது மேடையிலேயே மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் யு.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு கரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் சுயநினைவு இழந்ததாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். அவர் சிறிது காலம் ஓய்வெடுத்து பணிகளைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
விஜய் ரூபானியின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். அத்துடன் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில், உள் துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா ஆகியோர் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தனர்.