ETV Bharat / bharat

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எத்தனை சதவீதம் ஜிஎஸ்டி? - ஆகஸ்ட் 2ஆம் தேதி கூட்டத்தில் இறுதி முடிவு! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோக்கள், குதிரைப் பந்தயங்கள் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு, 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், வரிவிதிப்பு குறித்த இறுதி முடிவு, ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

ஆன்லைன் கேமிங்கிற்கு எத்தனை சதவீதம் வரி - ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு!

author img

By

Published : Jul 28, 2023, 1:43 PM IST

டெல்லி: ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரை பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டிவரியை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில், வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூலை மாத முதல் வாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில், கவுன்சில், ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் உள்ளிட்ட விளையாட்டுகளின் முழு மதிப்பின் மீது அதிகபட்சமாக 28 சதவீத வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களின் நிதி அமைச்சர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சில், இந்த விளையாட்டுகளின் நுழைவு நிலை அல்லது ஒவ்வொரு பந்தயத்திலும் வரி விதிக்கப்படுமா என்பது குறித்த இறுதி அழைப்பை எடுக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு, ஆன்லைன் கேமிங் துறையினரிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து, , ஜிஎஸ்டி கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறி உள்ளார்.

நிலையான மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் கேமிங் கட்டமைப்பை உருவாக்கும் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இன்னும் இருக்கிறோம். இந்த கட்டமைப்பு நிறுவப்பட்டதும், நாங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலை அணுகி, புதிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செயல்பட தயாராக இருப்பதாக, சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.

50வது கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை குறிப்பிட்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோக்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கும் முடிவு, அந்த தொழில்துறையை கொல்லும் நோக்கம் அல்ல. இங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி நடைமுறையில் உள்ளபோது, அதற்கு இணையாக, இந்த பொழுதுபோக்கு அம்சத்திற்கு வரி விதிக்க முடியாது என்று கருதுவதாக, நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு உள்ளார்.

அதிக லாபம் ஈட்டப்படுவதால், அதன் மதிப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாக, அதற்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. என்ன வரி விதிக்கப்பட வேண்டும், எதற்கு விதிக்கப்படக்கூடாது என்பதை இறுதி முடிவு செய்ய உள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். ஆன்லைன் கேமிங்கின் ஒழுங்குமுறை அம்சத்தை ஐடி அமைச்சகம் கவனித்து வருகிறது, அதே நேரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி நோக்கத்திற்காக மட்டுமே முடிவை எடுத்துள்ளதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மீதான இந்த வரியானது, இத்தகைய விளையாட்டுகளுக்கு திறமை தேவையா அல்லது வாய்ப்பு சார்ந்ததா என்பதன் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் வரி விதிக்கப்பட உள்ளது. லாட்டரி, சூதாட்டம் போன்ற ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ உள்ளிட்ட விளையாட்டுகளில் 'நடவடிக்கை உரிமைகோரல்' என வரையறுக்கும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தத்தை, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீதான வரிவிதிப்பு தொடர்பாக, அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழு (GoM) விளையாட்டு பந்தயங்களின் முக மதிப்பு அல்லது மொத்த விளையாட்டி வருவாயில் (பிளாட்ஃபார்ம் கட்டணம்) 28 சதவீத ஜிஎஸ்டியை விதிக்கலாமா என்பது குறித்த தனது அறிக்கையை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகிலுள்ள புலிகளில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன - ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.