ஜக்தல்பூர்: கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைவரும் வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த வேளையில், உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு பஸ்டார் இளைஞர்கள் குழு உணவளித்து வருகிறது.
இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த பரமேஸ்வர், சமூக பொறுப்புடைய செயல்களில் நாங்கள் ஈடுபட விரும்புகிறோம். கரோனா ஊரடங்கால் உணவகங்கள், கடைகள் மூடியிருக்கின்றன. இந்த வேளையில் உணவுக்காக தவிக்கும் ஏழை மக்களுக்கு நாங்கள் உணவளித்து வருகிறோம் என்றார்.
அரசாங்கம், தனியார் நிறுவனம் என யாருடைய உதவியும் இன்றி இந்த இளைஞர்கள் குழு இதை செய்துவருகிறது.
இந்தக் குழுவை சேர்ந்த மற்றொரு நபர் கூறுகையில், ஊரடங்கின் தொடக்கத்தில் 70 உணவு பொட்டலங்களை தயார் செய்தோம். அவை போதவில்லை, தற்போது 300 பொட்டலங்கள் வரை தயார் செய்கிறோம் என்றார்.
இதனால் பயனடைந்த மக்கள், பஸ்டார் இளைஞர்கள் குழுவை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.