ETV Bharat / bharat

ராஜஸ்தானில் ரூ.22,400 கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் & பசுமை அமோனியா ஆலை!

author img

By

Published : Oct 25, 2022, 5:27 PM IST

சுமார் 22,400 கோடி ரூபாய்செலவில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா தயாரிக்கும் ஆலை ராஜஸ்தான் மாநிலத்தில் நிறுவப்படவுள்ளது.

ராஜஸ்தான் ரூ.22,400 செலவில் பசுமை ஹைடரஜன் & அமோனியா ஆலை...!

டெல்லி: ராஜஸ்தானில் 22,400 கோடி ரூபாய் செலவில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா தயாரிக்கும் ஆலை ஜாக்சன் கிரீன் நிறுவனத்தால் நிறுவப்படவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான ராஜஸ்தான் அரசுடனான ஒப்பந்தத்திலும் இந்நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

தொடங்கவிருக்கும் இந்த பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா ஆலையில் ஓர் ஆண்டில் 3,65,000 டன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் கிரீன் ஆக்சிஜன் தயாரிக்கப்படும் என ஜாக்சன் கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தால் 2023 - 2028 காலகட்டத்திற்குள் 32ஆயிரம் பேருக்கு நேரடியாகவும்; மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உண்டாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம், ஜாக்சன் கிரீன் நிறுவனத்தின் தலைமை அலுவலரான விஸ் ஐயருக்கும் ராஜஸ்தான் அரசின் ஆற்றல்துறை முதன்மைச்செயலாளர் பாஸ்கர் சவாந்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. இதுகுறித்து ராஜஸ்தான் ஆற்றல் துறையின் முதன்மைச்செயலாளர் சவாந்த் கூறுகையில், 'ஜாக்சன் கிரீன் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் மாநிலத்தின் முதலீட்டாளர்களை மையப்படுத்திய திட்டங்களுக்கு ஓர் சாட்சியம்.

ராஜஸ்தான் அரசின் இந்த ஒத்துழைப்பையும் பசுமை ஹைட்ரஜன் குறித்த அம்மாநிலத்தின் பார்வையையும் நாங்கள் பாராட்டுகிறோம்' என ஜாக்சன் கிரீன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பிகேஷ் ஓக்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "நாங்கள் பெருமைப்படுகிறோம்": மருமகன் ரிஷி சுனக்கை வாழ்த்திய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.