டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வசிக்கும் முன்னாள் லெப்டினன்ட் கர்னல் சிவி பகதூரின் பேரனான அன்ஷுமன் தாபா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் மே6ஆம் தேதி இரவு கடைக்கு சென்றிந்தேன். அப்போது, அங்கிருந்தவரிடம் ஆங்கிலத்தில் உரையாடினேன். இந்த நிலையில், அங்கு வந்த கைஃப் என்பவர் என்னுடன் தகராறில் ஈடுபட்டார்.
'ஆங்கிலத்தில் பேசுகிறாயே.. நீ என்ன நேபாளியா' எனக் கேட்டார். தொடர்ந்து அவர் நாயை என் மீது ஏவி கடிக்க விட்டார். அந்த நாய் கடித்ததில் எனது காது கிழிந்து ரத்தம் வழிந்தது. இந்தச் சம்பவம் அன்றையத் தினம் இரவு 11.15 மணி நேரத்துக்கு நடந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புகார் குறித்து மாளவிகா காவல் நிலைய அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து பேசிய போலீஸ் அலுவலர் ஒருவர், “தற்போது அன்ஷுமான் மிகவும் பதற்றமாக உள்ளார். அன்ஷுமான் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் குறிப்பிடப்பட்ட நபரின் வீட்டை இரண்டு நாள்களாக காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர், ஆனால் அவர் வீட்டில் இல்லை. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: இந்தி பேசுகிறவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால், இந்தி தேசிய மொழியாக இருந்துவிட்டுப் போகட்டும்- கவிஞர் வைரமுத்து