நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறன்றன. ஜனவரி 2ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி சோதனை ஓட்டம் நடைபெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள சுமார் 83 கோடி ஊசிகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. மேலும், இதுவரை அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் 36 ஆயிரத்து 433 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகளவிலான முகக் கவசம் உற்பத்தியில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் சுமார் 1,700 முகக் கவச உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளனர் என அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிரான அவதூறுகளை மக்கள் நம்ப வேண்டாம்-பிரதமர் வேண்டுகோள்