இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நர்சிங் ஹோம், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாளொன்றுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை இது நடைமுறைபடுத்தபடும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அலுவலர்கள் கூறுகையில், மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் மிகவும் அவதிக்குள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
24 மணிநேரத்தில் நாடுமுழுவதும் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.