புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 27 ஆயிரத்து 461 பேர், முன்களப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 676 பேர், பொதுமக்கள் 33 ஆயிரத்து 183 பேர் என மொத்தம் 74,320 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று(ஏப்.2) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவிட் 19 எதிரான தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் - நாராயணசாமி