கரோனா பெருந்தொற்று சூழலில் புதுச்சேரி மாநில அரசானது, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் சத்துணவு வழங்க ஏற்பாடு செய்ய முடிவு செய்தது.
அதன்படி, நேற்று முன் தினம் (ஏப்ரல்23) புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
மேலும் பல்வேறு இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்வது மற்றும் அதற்காக சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சண்முகபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு சென்று அங்கு சுகாதார முறையில் தரமான உணவு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
பின்னர் அதன் தரத்தை அறிய விரும்பிய அவர், மதிய உணவாக தனக்கு ஒரு உணவு பொட்டலத்தை வாங்கி சென்றார்.