ETV Bharat / bharat

புதுச்சேரியில் காங்கிரஸ் பேனரை கிழித்த அரசு பள்ளி ஆசிரியர்! - teacher removed the Congress banner in Puducherry

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பேனரை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கிழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் பேனரை கிழித்த அரசு பள்ளி ஆசிரியர்!

author img

By

Published : Feb 8, 2023, 12:24 PM IST

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பேனரை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கிழிக்கும் வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளராக வெங்கடாஜலபதி செயல்பட்டு வருகிறார். இவர் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பொதிகை நகரில் வசித்து வருகிறார். இவரது தரப்பில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் தாகூர் கல்லூரி அருகே நடைபெற்ற விழாவிற்காக லாஸ்பேட்டை விமான சாலை உள்ளிட்ட சில இடங்களில் கட்சித் தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் (பிப்.6) இரவு லாஸ்பேட்டை விமான சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இதனை நேற்று (பிப்.7) காலை பார்த்த வெங்கடாஜலபதி, அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளார்.

அதில் பொதிகை நகரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் பேனரை கிழித்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தப் பகுதியில் எந்தக் கட்சியினர் பேனர் வைத்தாலும் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. எனவே திட்டமிட்டே அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ், பேனரை கிழித்துள்ளதாக வெங்கடாஜலபதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து வெங்கடாஜலபதி தரப்பினர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிரானைட் கடத்தல்.. சந்திரபாபு நாயுடு எழுதிய அவசர கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.