ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், "காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய தொழிலான பழங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை நசுக்கப்பார்க்கிறது. ஏற்கனவே காஷ்மீர் பழங்களின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி இறக்குமதி லாரிகள் வேண்டுமென்றே நிறுத்தப்படுகின்றன.
இது ஒரு வகையான பொருளாதார பயங்கரவாதம். பாலஸ்தீனியர்களின் பொருளாதாரத்தை உடைக்க இஸ்ரேல் முயற்சி செய்வது போல் இங்கு நடந்துவருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு ஆளுநரிடம் முறையிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதே ஜனநாயக ஆசாத் கட்சியின் நோக்கம் - குலாம் நபி ஆசாத்!