உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்குழு கொலிஜியம் என்றழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி, நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்பது நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்து பட்டியலை அரசுக்கு அனுப்பியிருந்தது.
இந்நிலையில், கொலிஜியம் பரிந்துரையை ஏற்று மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வர்.
பரிந்துரை செய்யப்பட்ட ஒன்பது நீதிபதிகள்
- நீதிபதி பி.வி. நாகரத்னா - கர்நாடக உயர் நீதிமன்றம்
- நீதிபதி பேலா திரிவேதி - குஜராத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி ஹிமா கோலி - தெலங்கானா உயர் நீதிமன்றம்
- நீதிபதி பி.எஸ். நரசிம்மா - உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
- நீதிபதி ஏ. ஓகா - கர்நாடக உயர் நீதிமன்றம்
- நீதிபதி விக்ரம் நாத் - குஜராத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி ஏ.கே. மகேஸ்வரி - சிக்கிம் உயர் நீதிமன்றம்
- நீதிபதி சி.டி. ரவிகுமார் - கேரள உயர் நீதிமன்றம்
- நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் - சென்னை உயர் நீதிமன்றம்
கொலிஜியத்தின் இந்தப் பரிந்துரையில் பிவி நாகரத்னா, ஹிமா கோலி, பேலா தேவி ஆகிய மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பரிந்துரையில் உள்ள நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
இதையும் படிங்க: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்