ஹரியானா: ஹரியானா மாநிலத்தின் ஹசர் பகுதியில் வசித்துவருபவர், விகாஸ். இவர் பல குற்றங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்நிலையில் விகாஸ் கடந்த 10 நாட்களுக்கு முன் பரோலில் வெளியே வந்தார். இவர் மீது மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் விகாஸின் தாயார் சாந்த்ரா தேவி அவரது கணவரை கொன்றதற்கு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
பரோலில் வந்த விகாஸ் மீது பலர் பழிவாங்கும் நோக்கில் இருந்ததாகவும், அவரை முன்னதாகவே கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 2) இரவு விகாஸ் அவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார்.
அப்போது திடீரென 6 முதல் 7 நபர்கள் கொண்ட குண்டர்கள் வீட்டிற்குள் நுழைந்து விகாஸை கட்டை, கோடாரி மற்றும் தடி போன்ற ஆயுதங்களால் தாக்கினர். விகாஸ் இதிலிருந்து தப்பி ஓட முயன்றபோது அக்கும்பல் விடாமல் தாக்கி விகாஸை கொடூரமாகக் கொன்றனர்.
சிசிடிவி காட்சிகள்: விகாஸைக் கொலை செய்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் விகாஸின் மனைவி மற்றும் குழந்தைகள் அக்கும்பலிடம் தாக்குதலை நிறுத்தக்கோரி கெஞ்சுகின்றனர். இருப்பினும் அக்கும்பல் விடாமல் தாக்கி விகாஸைக் கொல்வது பதிவாகியுள்ளது.
இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக ஹசார் காவல்துறையினர் விகாஸின் உடலைக்கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிசிடிவி காட்சி உதவியுடன் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மோடி, யோகியை பேஸ்புக்கில் விமர்சித்த உ.பி., இன்ஸ்பெக்டருக்கு விஆர்எஸ்...