சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாளான இன்று(அக்.1) அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
நடிப்பின் பல்கலைக்கழகம் என தற்போது வரை அனைத்து இந்திய நடிகர்களாலும் கொண்டாடப்படக் கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். நடிப்பின் பல்வேறு பரிணாமங்களை கற்று, அதனை வெளிப்படுத்தி மக்களை இன்பத்தில் ஆழ்த்தியவர்.
‘பராசக்தி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘புதிய பறவை’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கர்ணன்’, ‘முதல் மரியாதை’ ‘வசந்த மாளிகை’ என சிவாஜி நடிப்பை பறைசாற்றும் எத்தனையோ திரைப்படங்கள் உள்ளன.
இவர் பல விருதுகளை குவித்திருந்தாலும் தற்போதுவரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருப்பதே பெரிய விருதாகும். இன்று(அக்.1) இவர் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்களும், ரசிகர்களும் சமுக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.